பூம்புகார் நகரமே பொலிவிழந்து காணப்படுவதற்கு காரணம் என்ன.?

share on:
Classic

சித்திரையின் முழுநிலா நாளில் சங்க காலம் தொடங்கி  காலம் காலமாக பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வந்த  இந்திர விழா கடந்த சில ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் பூம்புகார் நகரமே பொலிவிழந்து காணப்படுகிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

கண்ணகி - கோவலன் பிறந்த ஊர். காவிரி கடலில் சங்கமிக்கும் பகுதி, தமிழகத்தின் முதல் துறைமுக நகரம் என பல்வேறு சிறப்புகளும் பெருமைகளையும் கொண்டது பூம்புகார் நகரம்.  இங்கு காலம் காலமாக மும்மாரி மழை பெய்ய வேண்டும், பசி, பிணி இல்லாமல் மக்கள் இன்புற்று வாழ்ந்து நாடு செழிக்க இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது. 

பூம்புகார் நகரமே கடலில் முழ்கியதால் 28 நாட்களாக கொண்டாடப்பட்டு வந்த விழா  ஒரு வார விழாவாக சுருங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களுக்காக இந்திர விழா புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தமிழரின் நாகரிகம் தொன்மை பெருமை கலாச்சாரம் போன்றவற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்திர விழாவினை வரும் காலங்களில் அரசு விழாவாக தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

News Counter: 
100
Loading...

Ragavan