கேரளாவில் களைகட்டிய பூரம் திருவிழா..!

share on:
Classic

கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா களைகட்டியுள்ளது. 

திருச்சூரைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கோவில்களில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் அலங்காரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். பூரம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான செண்டை, மத்தளம் உள்ளிட்ட பாரம்பரிய கருவிகளின் பஞ்சவாத்திய முழக்கமும் பக்தர்களை பரவசநிலைக்கு அழைத்துச் செல்கிறது. 

இதனைத் தொடர்ந்து, பூரம் விழாவின் முக்கிய நிகழ்வான வான வேடிக்கை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவை காண வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind