ஐக்கிய அரபு அமீரகத்தில் போப் ஆண்டவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

share on:
Classic

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டை சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் கடைப்பிடிக்கிறது. இதையொட்டி நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் வந்த போப் ஆண்டவருக்கு, அபுதாபி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இஸ்லாமிய மத தலைவர்களை சந்தித்து பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், பின்னர் அரண்மனைக்கு சென்று அரச குடும்பத்தினரை சந்தித்தார். 

அப்போது, அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஏமன் உள்நாட்டு போர் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind