குப்பைகளால் மாசடைந்து வரும் போரூர் ஏரி..!

share on:
Classic

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்த போரூர் ஏரி தற்போது குப்பைக்காடாக மாறியுள்ளது.

400 ஏக்கர் பரப்பளவு கொண்ட போரூர் ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. சென்னை வாழ் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த இந்த ஏரி மழையளவு குறைந்ததால் வறண்டு காணப்படுகிறது. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.  

ஏ.என்.இ. என்ற தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளிடமும், தனியார் மருத்துவமனைகளிடமும், உணவு விடுதிகளிலும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கழிவு பொருட்கள், குப்பைகளை ஏரியில் கொட்டி செல்கின்றன. 

அப்படி கொட்டப்பட்ட குப்பைகளை நள்ளிரவில்  எரிப்பதால்  வரும் புகை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அளவுக்கு அதிகமாக கொட்டப்படும் குப்பைகளினால் நிலத்தடி நீரும் மாசடைவதால் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஏரியை அசுத்தம் செய்வோர் மீது தொடர்ந்து புகார் அளித்தும் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இருக்கும் வளத்தை சுய லாபத்திற்காக அழித்துவிட்டு பிறகு வருந்துவதில் எந்த பலனும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

 

News Counter: 
100
Loading...

aravind