கொளுத்தும் கோடையால் சூடு பிடித்த பானை விற்பனை..!

share on:
Classic

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மண்பானை தண்ணீரை மக்கள் பயன்படுத்த தொடங்கினர். இதனால் மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி...

நாகரீக மறுமலர்ச்சி என்ற பெயரில் தற்போது மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி வைப்பது என்பது மட்டுமில்லாமல் உணவு சமைப்பதும் கூட அடியோடு மறக்கடிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் மண் பானைகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்க மண்பானையில் இருக்கும் குளிர்ந்த நீரை பலரும் பருகி வருகின்றனர். இதற்காக மன்பானையை மக்கள் நாடுவதால் தற்போது வெயிலைப் போல மண்பானை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பெரியார் சாலையில் உள்ள மண் பானை கடைகளில் மக்கள் அதிகம்  மண் பானைகளை வாங்கி செல்கின்றனர். 

 

தற்போது உள்ள காலகட்டத்தில் பிளாஸ்டிக் பத்திரங்கள் மற்றும் அலுமினிய பாத்திரங்களால் மண்பானையின் நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதனால் புது முயற்சியை மண்பாண்ட தொழிலாளர்கள் கையாண்டு வருகின்றனர்.மண்பானையில் குழாய் வைத்து விற்பனை செய்வது, மண்ணால் சமையல் பாத்திரங்கள் செய்வது, வீட்டிற்கு அழகு பொருட்கள் செய்வது என்று அசத்தி வருகின்றனர் விற்பனையாளர்கள். 

 

கடந்த ஆண்டை விட தற்போது வெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குளிர்சாதன பெட்டியில் வைத்து தண்ணீரை குடிப்பதை விட மண்பானைகளில் வைத்து தண்ணீரை குடிப்பதால் நமது உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தற்போது புதிதாக இதில் குடிநீர் பாட்டில்களும் வருவதால், முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதே சிறந்தது. 

 

 

News Counter: 
100
Loading...

aravind