அமெரிக்காவில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

share on:
Classic

அமெரிக்காவில் தெற்கு கலிஃபோர்னியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

வடகிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 202 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. இதனால் கட்டங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று தீயணைப்பு துறை தெரிவித்தது. நேற்று முன் தினமும், அதே பகுதியில் 6.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் நேற்றும் மீண்டும் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மெட்ரோ ரயில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழு பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

25 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1994-ம் ஆண்டு இதேபோல் தெற்கு கலிஃபோர்னியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 57 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

Ramya