மாணவர்களுக்கு இந்தி திணிப்பா..? மறுக்கும் மத்திய அமைச்சர்.!

share on:
Classic

நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதியக்கல்விக்கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு தனது பரிந்துரையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியது. அதில்  நாடு முழுவதும் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு மும்மொழிப்பாடத்திட்டத்தை கட்டாயமாக்க பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.. அதே போல அறிவியல், கணிதம், பாடங்களை ஒரே மாதிரியாக வடிவமைக்கவும் பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று வெளியான தகவலுக்கு  மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், கஸ்தூரி ரங்கன்  குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது பற்றி, நாளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுடன் அலோசனை நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind