பாரத் ரத்னா விருது பெற்றார் பிரணாப் முகர்ஜி..!

share on:
Classic

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவித் பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் நானாஜி தேஷ்முக், புகழ்பெற்ற அசாமி பாடகர் பூபென் ஹாசாரிகா ஆகியோருக்கு வழங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிராணப் முகர்ஜி, மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தார். நாட்டின் மேன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவித் பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.

இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவரான நானாஜி தேஷ்முக் மற்றும் புகழ்பெற்ற அசாமி பாடகர் பூபென் ஹாசாரிகா ஆகியோர் உயிருடன் இல்லாததால், அவர்களின் சார்பில் வாரிசுகள் பாரத் ரத்னா விருதை பெற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan