இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து..!

share on:
Classic

இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்ந்த தொடர் வெடி குண்டு தாக்குதலில் இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாட்டே உலுக்கிய இந்த நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டன. 

இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவலாயங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி தேவாளயங்களுக்குள் பைகள் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் முகத்தை மூடும்படியான ஆடைகள் அணியவும் அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind