தங்குவதற்கு இடமில்லை..மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் அவதி..அரசு மருத்துவமனையில் அவலம்..!

share on:
Classic

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள், தரையில் தங்க வைக்கப்படுவதால், அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டமின்றி கேரளா மாநிலத்திலிருந்தும்  ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட கர்பிணி பெண்கள் பிரசவத்திற்காக சேர்க்கப்படுகின்றனர்.  

மகப்பேறு அடைந்த பெண்களை இடவசதி குறைந்த வார்டுகளில் அமர்த்தி, தரையில் தங்க வைக்கின்றனர். இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind