ப்ரீத்தி ஜிந்தாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

share on:
Classic

சிட்னியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தாவும் வாழ்த்து தெரிவித்து நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளானார்.

சிட்னியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில்  இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. அத்துடன், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 71 ஆண்டுகால தாகத்தை விராட் கோலி அணி தீர்த்துள்ளது.

இது 1947- 48ல் இருந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு இது  முதல் சாதனையாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடறில் வென்று முதல் ஆசியக் கேப்டனாகவும், முதல் இந்திய வீரராகவும் விராட் கோலி பெருமையை பெற்றார். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளறும் மற்றும் நடிகையுமான ப்ரீத்தி  ஜிந்தா இந்திய அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அவர் "டெஸ்ட் போட்டியில்" வெற்றி பெற்ற முதல் ஆசிய அணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார். ஆனால், இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ள நிலையில், அதனை டெஸ்ட் போட்டி என அவர் குறிப்பிட்டிருந்ததால் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளானார். இந்த சிறு வித்தியாசம் கூட தெரியாமல் அணியின் உரிமையாளராக இருக்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind