வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது - சத்யபிரத சாகு

share on:
Classic

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் முடிவுகளை இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக உடனடியாக அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள 88 தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடுவார்கள் என்றும் மாநிலம் முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறினார். தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படுகின்றன.

News Counter: 
100
Loading...

Ragavan