நெல்லிக்காய் ஷாம்பூ, ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி..?

share on:
Classic

நெல்லிக்காய் நம் உடலுக்கு பல விதத்தில் நன்மை பயக்கும்.

நெல்லிக்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்பர். அது நம் தலைமுடிக்கும் கேசத்துக்கும் ஊட்டம் அளிக்கும். அதனால், பலரும் ஆம்லா ஷாம்பூ, ஆம்லா ஹேர் ஆயில் போன்ற பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். அனால், அந்த ஷாம்பூ, ஹேர் ஆயில்களில் உன்மையாகவே நெல்லிக்காய் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா, நெல்லிக்காயின் நற்குணங்கள் உள்ளதா என்றால், அது சந்தேகம் தான். அதனால், இப்போது நெல்லிக்காயை பயன்படுத்தி வீட்டிலேயே எப்படி ஷாம்பூ மற்றும் எண்ணெய் தயாரிப்பது என பார்க்கலாம்.

நெல்லிக்காய் ஷாம்பூ :
மென்மையான கேசத்தை தரும் நெல்லிக்காய் ஷாம்பூவை செய்வதற்கு, முதலில் கைப்பிடியளவு பூந்திக் கொட்டை, உளர்ந்த நெல்லிக்காய் மற்றும் சீகைக்காயை எடுத்து, தண்ணீரில் போட்டு, இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

மறுநாள் காலை, அதனை எடுத்து தண்ணீர் பாதியாக வற்றும் வரை அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சவும். பிறகு, அதனை எடுத்து, ஆரவைத்து சுத்தமான துனியைக் கொண்டு வடிகட்டி எடுத்தால், ஹோம் மேடு ஆம்லா ஷாம்பூ தயார். இப்போது அதனை தலை குளிக்கும் போது பயன்படுத்தலாம். இந்த ஷாம்பூவை 3-4 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

நெல்லிக்காய் கேச எண்ணெய் :
நெல்லிக்காய் ஹேராயில் செய்வதற்கு, முதலில் ஒரு கைப்பிடி காய்ந்த நெல்லிக்காயை எடுத்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த அந்த பொடியை 100 மி.லி சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலந்து, காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, 15 நாட்களுக்கு தினமும் வெயிலில் வைத்து எடுக்கவும். கடைசியாக அந்த எண்ணெயை வடிகட்டி எடுத்தால் ஹோம் மேடு ஆம்லா ஹேராயில் ரெடி. இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால், கேசம் அடர்த்தியாக, நீளமாக ஆரோகியமாக வளரும்.

 

News Counter: 
100
Loading...

Ragavan