டெல்லியில் 2-ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கு விழா..!

share on:
Classic

சமூக சேவகி சின்னப்பிள்ளை, நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார்

கடந்த மாதம் 11ம் தேதி பத்ம விருதுகள் வழங்கும் முதற்கட்ட விழா நடத்தப்பட்டது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி, பங்காரு அடிகளார் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. 

இதில் மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை, பரத நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

sajeev