தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

share on:
Classic

திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் பா.ஜ.க சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அவரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எஸ். பி வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனையடுத்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பொதுக்கூட்டத்தின்போது, சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் அவர் தொடங்கி வைக்கிறார். அதே போல், ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து பரமக்குடி- தனுஷ்கோடி இடையேயான 4 வழிப்பாதை, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை ஆகியவற்றுக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

News Counter: 
100
Loading...

vinoth