பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதியில் மாற்றம்

share on:
Classic

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி பிப்ரவரி 19-ல் இருந்து மார்ச்  ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் பா.ஜ.கவை பலப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கடந்த 27ம் தேதி மதுரை வந்த அவர், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியதுடன், பா.ஜ.க. பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, 2-வது முறையாக கடந்த 10ம் தேதி திருப்பூர் வந்த மோடி, சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக, வரும் 19-ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகவும், அப்போது பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி பிப்ரவரி 19-ல் இருந்து மார்ச்  ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind