சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

share on:
Classic

திருப்பூரில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் சேவை மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி, திருப்பூரில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் பா.ஜ.க சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அவரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எஸ். பி வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனையடுத்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு ஹெலிக்காப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தடைந்தார். இதனையடுத்து, சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவை, திருப்பூரில் 100 படுக்கை வசதியுடன் கூடிய ஈ.எஸ்.ஐ மருத்துவமனை, சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் திருச்சியில் நவீனப்படுத்தப்படும் விமான நிலைய கட்டிடத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News Counter: 
100
Loading...

vinoth