10 சதவீத இடஒதுக்கீடு ஏன்..? விளக்கும் பிரதமர் மோடி

share on:
Classic

அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்ததாகவும் தெரிவித்தார். ஒதுக்கீடு மசோதா குறித்து தவறான கருத்துக்கள் பரவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மசோதா மாநிலங்களவையில்  நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் கூறினார். 

News Counter: 
100
Loading...

aravind