சிறையில் பினாயிலை குடித்து தற்கொலை முயன்ற கைதி..!

share on:
Classic

பெரியகுளம் கிளைச் சிறையில் கைதி ஒருவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

தேனி மாவட்டம், ராஜதானி அருகே ஜக்கம்மாள்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் கிளைச் சிறையில் கைதியாக உள்ளார். இந்நிலையில், இவர் சிறையில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிறைக் காவலர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev