காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து பிருத்வி ஷா விலகல்

share on:
Classic

ஆஸ்திரேலிய தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி, ஆஸ்திரேலிய லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்த ஆட்டத்தின் போது, கேட்ச் பிடிக்க பிருத்வி ஷா முயன்றபோது, அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு, தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிருத்வி ஷா விளையாட மாட்டார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth