பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை..

share on:
Classic

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் போராடுவதை தடுக்க பொள்ளாச்சியில் 2-வது நாளாக இன்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான திருநாவுக்கரசு உள்ளிட்டோரை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். பொள்ளாச்சியில் மாணவர்கள் ஒன்றிணைந்து போராடுவதை தடுக்க 2வது நாளாக இன்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலக்காடு சாலை மற்றும் உடுமலை சாலையில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் இரண்டாவது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் வெளியேற கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கல்லூரி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லி மாணவர்களை சொந்த ஊருக்குச் செல்லுமாறு கல்லூரிகளின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பதற்றம் காரணமாக முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev