தனியார் FM-களில் இனி ஆல் இந்தியா ரேடியோ செய்திகள்...

share on:
Classic

தனியார் எஃப்.எம் நிறுவனங்கள் ஆல் இந்தியா ரேடியாவின் (All India Radio) செய்திகளை ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஆல் இந்தியா ரேடியோவின் செய்திகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் அல்லது அந்தந்த செய்தி அட்டவணையில் உள்ள படி ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.  மே 31-ஆம் தேதி வரை முன்னொட்ட ஒளிபரப்பு அடிப்படையில் இலவசமாக ஒளிபரப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக மத்திய இணையமைச்சர் ராஜ்ய வர்தன் ராதோர் தெரிவித்தார். தனியார் எஃப்.எம் நிறுவனம் செய்திகளை ஒளிபரப்ப விரும்பினால் ஆல் இந்தியா ரேடியோவின் இணையதளத்தில் தங்கள நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். செய்தி தொகுப்பை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் செய்திகளுக்கு இடையே வரும் விளம்பரங்களையும் சேர்த்தே ஒளிபரப்ப வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தங்கள் நீண்ட நாள் கோரிக்கையான செய்திகளை ஒளிபரப்ப அனுமதி அளித்ததற்காக மத்திய அரசுக்கு இந்திய ரேடியோ ஆப்ரேட்டர்கள் சங்கம்  நன்றி தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind