தடுப்பரண் மீது ஏறி குதித்து மக்களுடன் செல்ஃபி எடுத்த பிரியங்கா காந்தி..!

share on:
Classic

ரட்லாம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி தடுப்பரண் மீது ஏறி குதித்து மக்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, மத்தியபிரதேச மாநில ரட்லாம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் பிரியங்கா காந்தியை பார்ப்பதற்கு அக்கட்சியின் தொண்டர்கள் முண்டியடித்து கொண்டனர். இதை பார்த்த பிரியங்கா காந்தி, தடுப்புக் கம்பத்தின் மீது ஏறி குதித்து தொண்டர்கள் நடுவே சென்றார். இதை பார்த்த மக்கள் ஆரவாரம் செய்து, பிரியங்கா காந்தியுடன் கை குலுக்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

 

 

News Counter: 
100
Loading...

aravind