லக்னோவிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி

share on:
Classic

கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி, லக்னோவிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்த பிரியங்கா காந்திக்கு, முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரை, கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்தார். இதனையடுத்து, நேரடி அரசியலில் குதித்த பிரியங்கா,  காங்கிரஸ் கட்சியில் பதவிபெற்ற பின், தனது அரசியல் பயணத்தை லக்னோவிலிருந்து தொடங்கியுள்ளார். இதற்காக லக்னோ வருகை தந்துள்ள அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்திலிருந்து லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு பேரணியாகச் செல்லும் அவருக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரியங்காவுடன், அவரது சகோதரரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோருடன் பேரணியாகச் செல்கின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind