மீம் வெளியிட்ட பெண், மம்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

share on:
Classic

மம்தா பானர்ஜி தொடர்பாக மீம் வெளியிட்டு கைதான பெண், மம்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தொண்டர் பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில் மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மீம் வெளியிட்டார். இந்த மீம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, பிரியங்கா சர்மா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸார் கைது செய்வதற்கு முன்னதாக பிரியங்கா சர்மா, மீம் புகைப்படத்தை அளித்து விட்டார். இருப்பினும் இந்த மீம் புகைப்படம் வேகமாக சமூகவலைதளங்களில் பரவியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர்களின் உரிமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கு வேண்டும் என குறிப்பிட்டு, பிரியங்கா சர்மா, மம்தா பானர்ஜியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும், எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கடிதத்தை வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். அதேபோல், பிரியங்கா சர்மாவின் செயலுக்கு கட்டணம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு நிபந்தனையோடு கூடிய ஜாமீன் வழங்கினர்.

News Counter: 
100
Loading...

Ragavan