ப்ரோ கபடி : பெங்களூரு அணி சாம்பியன்..

share on:
Classic

ப்ரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. 

6-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர்.

ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியினர் விஸ்வரூபம் எடுத்தனர். இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

News Counter: 
100
Loading...

aravind