பாலியல் வழக்கில் விடுதலை செய்யக் கோரி நிர்மலாதேவி மனு தாக்கல்

share on:
Classic

பாலியல் வழக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு போதிய முகாந்திரம் இல்லாததால் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth