திருப்பூரில் மோடி வருகைக்கு எதிராக போராட்டம்

share on:
Classic

பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து திருப்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருப்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் செல்லும் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பொதுக்கூட்டத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய 8 தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி பொதுக்கூட்ட மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் குமரன் சிலை அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி போராட்டம் நடந்த இடத்திற்கு வந்ததால் அவரை மதிமுகவினர் தாக்க முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

News Counter: 
100
Loading...

vinoth