குடிநீர் வேண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

share on:
Classic

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 20 நாட்களாக தண்ணீர் வராததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ராஜபாளையம்  சமுசிகாபுரம் ஊராட்சியை சேர்ந்த கிழவன்கோவில் கிராமத்தில் குடிநீர் ஏற்றும் மோட்டார் பழுதானது. இதனால், 20 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, சமுசிகாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind