மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ-ஜியோ..?

share on:
Classic

போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என நீதிமன்றத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அளித்த உத்தரவாதத்தை திரும்பப்பெற்றனர்.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளித்திருந்தனர். 

இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட சித்திக் குழு அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நீதிமன்றத்தில் தாங்கள் அளித்த உத்திரவாதத்தை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் திட்டமிட்டபடி ஜனவரி 22 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind