நீலம் - ஜீலம் நதி நீர்மின் திட்டத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்ப்பாட்டம்

share on:
Classic

நீலம் - ஜீலம் நதியில் நீர் மின் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13,300 சதுர கிலோ மீட்டர் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இங்கு நீண்ட காலமாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஓடும் நீலம் - ஜீலம் ஆற்றில் நீர் மின் திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முசாபராபாத் பகுதியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் அரசை எதிர்த்தும், மிகப்பெரிய அணை மற்றும் நீர் மின் திட்டங்களை சுட்டிக் காட்டி இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

News Counter: 
100
Loading...

sasikanth