தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

share on:
Classic

தமிழ்நாட்டின் நிதி நிலை’ குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA  ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.

“சிக்கனம் வீட்டைக்காக்கும்; சேமிப்பு நாட்டைக் காக்கும்” என்பதற்கு ஏற்ப, தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான 2006-11 ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலை சிறப்பான வளர்ச்சியை எட்டியிருந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 2011-16 ஆட்சிகாலத்தில் சீரழிவு ஏற்படத் தொடங்கியது. இந்தச் சீரழிவு, 2014ல் ஜெயலலிதா தண்டனை பெற்று, எந்த விவகாரங்களையும் கையாள முடியாத அளவுக்கு செயலற்றிருந்த காலகட்டத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிர்வாகத் திறனற்ற எடப்பாடி பழனிசாமி அவர்களின் 2016-18 ஆட்சியில் நிதி மேலாண்மை முற்றிலுமாக மோசமடைந்து, தமிழ்நாடு பேரழிவை சந்தித்து வருவதை இந்த ஆய்வறிக்கை முழுமையாக ஆராய்ந்து, புள்ளி விவரங்களை ஒப்பிட்டு முழுமையாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, 08-02-2019 அன்று தமிழ்நாடு அரசின் 2019-20 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ‘நிதி மேலாண்மை’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரியாமல், இயலாமையை மறைத்துப் பொய்யுரைகளை கட்டமைக்கும், கடந்த 7 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மாநில வருவாய் பெருமளவில் குறைந்து, தமிழ்நாட்டு மக்களுடைய தலையில் பெரும் தொகை கடனாக திணிக்கப்பட்டு, வருவாயில் பெரும்பங்கு வட்டிக்கே செலுத்தப்படும் அளவுக்கு, தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தள்ளாடுவதை இந்த ஆய்வறிக்கை ஆதாரங்களோடு முழுமையாக எடுத்துரைக்கிறது.

News Counter: 
100
Loading...

aravind