கூகுள் ப்ளே-வின் மூன்று விருதுகளை பெற்று சாதனையின் உச்சியில் இருக்கும் PUBG

share on:
PUBG, ப்ளே ஸ்டேர், ஆண்ட்ராய்டு கேம், Android, Play Store, தொழில்நுட்பம்
Classic

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரை தனது பிடியில் கட்டிப்போட்டுள்ளது PUBG. ஆண்ட்ராய்டு கூகுள் ப்ளே ஸ்டோர் ஆஃபில் இதுவரை PUBG கேம் 100 மில்லியன் டவுன்லோடு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. 

ஆண்ட்ராய்டின் சிறந்த கேம்மிற்கான 2018 விருதை கூகுள் இன்று அறிவித்தது. இதில் சிறந்த கேம்(Best Game), ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவை(Fan Favorite award )மற்றும் எம்.சி.டி எனப்படும் (Most Competitive Title)என 3 விருதுகளை வாரி சுருட்டி உள்ளது. 

ஆண்ட்ராய்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த கேம்மை இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். குறுகிய காலக்கட்டத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்களில் PUBG முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலும் PUBG கேம்மை விரும்பி விளையாடுபவர்கள் அதிகமானோர் உள்ளனர்.

PUBG கேம் ஆண்ட்ராய்டு போன்களில் எளிமையாக விளையாட கண்ட்ரோலர், ஜாய் டிக் ஆகியவை அதிகமாக விற்பைனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான கோல்டன் ஜாய் ஸ்டிக் அவார்டையும் வென்று PUBG கேம் சாதனையின் உச்சத்தில் உள்ளது.
 

News Counter: 
100
Loading...

vijay