“புதுச்சேரி எனக்கு சொந்தமானது, புதுச்சேரிக்கு நான் சொந்தமானவள்” - கிரண் பேடி

share on:
Classic

புதுச்சேரியின் அயிரகணக்கான வாக்காளர்களுள் நானும் ஒருவர் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வாக்களித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி "புதுச்சேரி எனக்கு சொந்தமானது, புதுச்சேரிக்கு நான் சொந்தமானவள். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சொந்தமானவர்கள், புதுச்சேரிக்கு ஆற்றும் சேவையின் மூலம் இந்த நாட்டுக்கு நான் சேவை செய்கிறேன். புதுச்சேரியில் உள்ள ஆயிரக்கணக்கான வாக்காளர்களைப் போன்று நானும் ஒரு வாக்காளர். அவர்களில் ஒருவராக இருக்கும் எனக்கு அதிக பொறுப்பு உள்ளது. அதுவே எனக்கு கிடைத்த பெருமையும் கடவுள் தந்த வாய்ப்பும் ஆகும்" என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan