கிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் - புதுச்சேரி முதல்வர்

share on:
Classic

கிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் விமர்சித்தது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண் பேடி இடையே ஆரம்ப நிலையில் இருந்தே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதன் இடையே எந்த ஒரு அரசின் நிலைப்பாட்டிற்கும் ஆளுநர் ஒத்துழைப்பு தராமல் பெரும்பாலும் மோதல் நிலையே காணப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 11-ம் தேதி ஒரு கோப்பை அனுப்பி பொங்கல் அன்று அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் உலர்ந்த திராட்சைகள், முந்திரி பருப்புகள் மற்றும் ஏலக்காய் கொண்ட பொங்கல் பரிசை  வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார் நாராயணசாமி. இதற்க்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். 

இதனிடையே அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு எதிராக ஆளுநர் கிரண் பேடி தங்களின் நிலைப்பாட்டை தொடர்ந்தாலோ அல்லது ஆளுநர் இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒப்புக்கொள்ளாவிட்டாலோ "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று நாராயணசாமி கூறினார். அது மட்டுமின்றி, புதுச்சேரி மாநில மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுகளை கிரண் பேடி தடுத்தால் அவரை துரோகி என்று மக்கள் எண்ணுவார்கள் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார். மக்கள் கொதித்து எழுந்தால் கிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் எனவும் அவர் விமர்சித்தார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu