புதுச்சேரி : விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்கு, பச்சைக்கிளிகள் பறிமுதல்..!

share on:
Classic

புதுச்சேரியில் விற்பனைக்கு வைக்கப்பபபட்டிருந்த கொக்கு மற்றும் பச்சைக்கிளிகளை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரி அருகே ஒதியம்பட்டு கிராமத்தில் வனத்துறை சட்டத்தை மீறி கொக்கு மற்றும் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் பறவைகளை விற்பனை செய்துகொண்டிருந்த கும்பல் பறவைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். பின்னர், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள், 25 பச்சைக்கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், வனத்துறை சட்டப்படி பறவைகளை விற்பனை செய்வதும் வாங்குவதும் குற்றம் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

News Counter: 
100
Loading...

Ragavan