புதுச்சேரி : தாயை கொன்று, சடலத்துடன் 1 வாரமாக தங்கியிருந்த மகன்..!

share on:
Classic

நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கொலைச்செய்த மகன், ஒரு வாரத்திற்கு பின்னர் குற்றவுணர்ச்சியால் போலீசில் சரணடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 51 வயதான ஜெயமேரி, கணவனை இழந்து தனது மகன் அமலோற்பவனுடன் வசித்து வந்தார். அவருக்கு பல வாலிபர்களுடன் கள்ளதொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாலிபர்களுடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததை பார்த்த மகன், ஆத்திரமடைந்து வீட்டிலிருந்த நாற்காலியால் தாயை தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த ஜெயமேரியை, கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை அறையிலேயே வைத்து பூட்டி விட்டு, தானும் அதே வீட்டில் 7 நாட்கள் பிரேதத்துடன் தங்கியுள்ளார். ஒருகட்டத்தில் குற்ற உணர்வு வாட்டியதால் அமலோற்பவநாதன் போலீசில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை மத்திய சிறையில் அடைத்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan