6வது நாளாக தொடரும் புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

share on:
Classic

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர்ந்து 6வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி, புதுச்சேரி அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் 850க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 6வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே இரண்டு மாத ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள ஊழியர்கள், முழு ஊதியத்தையும் வழங்கினால் மட்டுமே பேருந்தை இயக்குவோம் என அறிவித்துள்ளனர். 

மேலும் தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

 

News Counter: 
100
Loading...

aravind