புதுச்சேரியில் 23, 24ம் தேதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு..!

share on:
Classic

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை முன்னிட்டு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் 6 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், புதுச்சேரி முழுவதும் 23-ஆம் தேதி முதல், 24ஆம் தேதி மாலை 4 மணி வரை 2 நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan