வாக்களிக்க அனுமதிகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்..!

share on:
Classic

புதுக்கோட்டை அருகே வாக்குபதிவு செய்ய அனுமதிக்ககோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

எருக்கலக்கோட்டையைச் சேர்ந்த தேன்மொழி கொடைக்கானலில் வேலை செய்து வருகிறார். அங்கிருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த அவர், வாக்களிப்பதற்காக வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், உரிய விளக்கம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், நடிகர் ஒருவரை பெயர் இல்லாமல் வாக்களிக்க அனுமதித்தது போல், தன்னையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan