முன்னாள் MP ராஜா பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார்

share on:
Classic

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ராஜா பரமசிவம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

1999 - 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக மக்களவை உறுப்பினராக இருந்தவர் ராஜா பரமசிவம். வாஜ்பாய் அரசு கலைக்கப்பட்ட போது இவர் தனது பதவியை இழந்தார். அதிமுகவின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக பணியாற்றிய ராஜா பரமசிவம் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளும் வகித்தார். 

இதன் பின்னர் திமுகவில் இணைந்த மீண்டும் அதிமுகவிற்கே திரும்பினார். ஜெயலலிதா இறந்த பிறகு தீபா அணியில் இணைந்து பணியாற்றி வந்தார். உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜா பரமசிவம், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலமானார்.

 

News Counter: 
100
Loading...

aravind