பஞ்சாப் VS ஹைதராபாத்.. பஞ்சாப் அணி வெற்றி..!!

share on:
Classic

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

பேர்ஸ்டோவ் 1 ரன் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னருடன் விஜய்சங்கர் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருக்கும்போது விஜய் சங்கர் 27 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வார்ணர் 49 பந்தில் அரைசதமடித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 

151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயிலும், லோகேஷ் ராகுலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெயில் 16 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த வந்த அகர்வால், ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர்.

ராகுல் அரை சதம் அடித்தார். அதைத்தொடர்ந்து அகர்வாலும் அரை சதம் அடித்தார். 19.5 ஓவரில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்த லோகேஷ் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan