தினம் ஒரு முட்டை சாப்பிடுவதால்...என்ன பயன்..??

share on:
Classic

முட்டையில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் அதை உண்ணும் போது கண்ணிற்கு நல்ல பலனை தருகிறது.

முட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது  கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது. முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் உள்ளது.

உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் டி முட்டையில் உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். முட்டையினை ஒரு மாதம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் முட்டை வரை  உண்ணலாம்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan