வரலாறு படைத்தார் பி.வி. சிந்து..!

share on:
Classic

உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஷட்லர் என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் நேற்று நடந்த பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி. சிந்து தங்கம் வென்றார். இதன் மூலம், பேட்மிண்டனில் வரலாற்றில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஷட்லர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டிற்கான BWF WORLD CHAMPIONSHIPS நிகழ்வில், பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவுக்கு எதிராக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து விளையாடினார். 38 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில், சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் ஒகுஹாராவை தோற்கடித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan