2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை... பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை... பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு...

2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை... பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு...

2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை... பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு...

மேட்டூர் அணை  இந்த ஆண்டு 2வது முறையாக நிரம்பியதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நடப்பாண்டில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை மீண்டும் எட்டியுள்ளதால், அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அணையை பார்வையிட்டனர்.

மதகுகள், நீர் வரத்து, வெளியேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அணையின் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்து  தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ரோகிணி காவேரி நியூஸ் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.