5 வது முறையாக ஆஸ்-ஓபன் இறுதி போட்டியில் ரஃபேல் நடால்..!!

share on:
Classic

2019ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் கிரீஸ் நாட்டு வீரர் 'ஸ்டெபினோஸை' வென்று ஐந்தாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் 'ரபேல் நடால்'.
 

5 வது முறையாக :

ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த அரையிறுதி போட்டியில், 6-2, 6-4, 6-0 என்ற அபார செட் கணக்கில் ரஃபேல் நடால் இந்த போட்டியை வென்றார். இந்நிலையில் கடந்த வருட சாம்பியனான 'ரோஜர் பெடரரரை' தோற்கடித்து அரையிறுதி போட்டிக்கு வந்தவர் தான் இந்த 'ஸ்டெபினோஸ்' என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக நடந்த இந்த அரையிறுதி போட்டியில், அதிரடியாக வென்ற ரபேல் மக்களின் ஆரவாரத்தோடு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 2009 ஆண்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 'நடால்' நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் சேர்பியாவை சேர்ந்த 'நோவோக் டிஜோகோவிக்' அல்லது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த 'லூகாஸ் பௌலி' யோடு மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sankaravadivu