ரஃபேல் விவகாரத்தில் மோடி சிறை செல்வது உறுதி : ராகுல்காந்தி பேச்சு

share on:
Classic

இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் மோடி சிறை செல்வது உறுதி என்று கூறிய அவர், பாஜக மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

தேர்தல் போதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது “ மோடி பொய்யை தவிர வேறு எதையும் சொல்வதில்லை. 2 கோடி வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியா இன்று மிகபெரிய வேலைவாய்ப்பு திண்டாத்ததை சந்தித்துக்கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வேதனை நான் நேரடியாக ஜந்தர் மந்தரில் பார்த்தேன். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்தோம். அதேபோல் ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றினோம். ஆனால் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கூறி வருகிறார். ஆனால் ரஃபேல் விவகாரத்தில் உங்கள் பணத்தை எடுத்து அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மோடி சிறை செல்வது உறுதி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு திண்டாட்த்தை ஒழிப்போம். ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்போம். ஒரே வரி, எளிமையான வரி, குறைவான வரியை கொண்டுவருவோம்.

மேட் இன் சீனாவை (Made in China) மாற்றி மேட் இன் தமிழ்நாடு (Made in Tamilnadu) என்று கூறும் அளவுக்கு தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்றுவோம். தொழில் துறையில் தமிழகம் சீனாவிற்கு போட்டியாக இருக்கும். வங்கிக்கடன்கள் தொழில் ஆரம்பிக்க நினைக்க ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். நாட்டில் வாழும் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்திற்கான உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவோம். குறைந்தப்பட்ச வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் யாரும் வறுமையில் இருக்கமாட்டார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வோம். 33% பெண்களுக்கு பாராளுமன்றத்திலும், மத்திய அரசு வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya