”பிரதமர் மோடியை ராகுல் விமர்சித்தது தவறு” தமிழிசை ஆவேசம்..!

share on:
Classic

கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று பேசிய ராகுல், அவர் ஆட்சி வந்தால் செய்யும் திட்டங்கள் குறித்து கூறியிருக்கலாம். ஆனால், 3000 பெண்கள் மத்தியில் பேசும் தைரியம் மோடிக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்புகிறார் என்று விமர்சித்த தமிழிசை, வெளிநாடுகளுக்கு சென்ற போது, இந்திய வம்சாவளிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசி உள்ளார் என கூறினார். 

மேலும், கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புகிறார். காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு ஏன் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை. கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல்காந்தி பேசியது தவறானது எனவும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

 

News Counter: 
100
Loading...

vinoth