ராஜினாமா செய்யும் முடிவில் உறுதி - ராகுல் காந்தி

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போதும் தனது முடிவில் உறுதியுடன் இருப்பதாகவும், புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தான் ஈடுபடப்போவதில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், "புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தான் ஈடுபடப்போவதில்லை, அது மேலும் சிக்கலாக்கும் என்பதால் கட்சியே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்" என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில், ராகுல் காந்தியின் இந்த ராஜினாமா முடிவை முடிவை மாற்றிக் கொள்ளுமாறு காங்கிர கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

News Counter: 
100
Loading...

Ragavan