மக்களவைத் தேர்தல் 2019 : டிராக்டர் ஓட்டியபடி வாக்கு சேகரித்த ராகுல் காந்தி..

share on:
Classic

பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு மே 19 ஆம் தேதி 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரவு தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டு கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, லுதியானா பகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல்காந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். பின், அங்கிருந்த டிராக்டரை ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்டோர் ராகுல்காந்தியுடன் டிராக்டரில் பயணித்தப்படி வாக்கு சேகரித்தனர்.

News Counter: 
100
Loading...

Ramya